கொரோனா பாதித்தாலும் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால்! – சுகாதார அமைச்சகம் அறிவுரை

 

கொரோனா பாதித்தாலும் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால்! – சுகாதார அமைச்சகம் அறிவுரை

தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டலாம். புகட்டும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்று மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டலாம். புகட்டும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்று மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் பிறகு தாய்ப்பாலுடன் ஏதாவது ஒரு உணவை அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் புகட்டினால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வளர்ச்சி பெறாத நிலையில் தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கான ஒரே நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நிலையில் சில கர்ப்பிணிகளுக்கும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாத நிலை உள்ளது. குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக குழந்தையைவிட்டு ஒதுங்கி இருக்கும் நிலையும் உள்ளது.

corona-prevention

இந்த பயம் தேவையற்றது, குழந்தைகளுக்கு தாராளமாகப் பால் புகட்டலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் அதற்கு தாய்ப்பால் புகட்ட வேண்டியது அவசியம் என்று அது தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை புகட்டுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும், தும்பும்போதும், இருமலின் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். கைகளை குறைந்தது 40 விநாடிகள் சோப் போட்டு கழுவ வெண்டும். தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பு கையை நன்கு சோப் போட்டு கழுவ வேண்டும். குழந்தை அருகே செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பால் புகட்டும் அறையை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
தாய்க்கு பாதிப்பு தீவிரமாக இருந்தால், தாய்ப்பாலை வெளியே எடுத்து குழந்தைக்கு அருந்தக் கொடுக்கலாம்” என்றும் கூறியுள்ளது.