கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது… உலக அளவில் 22வது நாடு….

 

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது… உலக அளவில் 22வது நாடு….

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று இரவு 10 ஆயிரத்தை தொட்டது. மேலும் இந்த இலக்கை தொட்ட 22வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் அதன் ஆட்டத்தை காண்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24ம் தேதியன்று நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது. அந்த நேரத்தில் நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கி இருந்தது. ஆனால் அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாக இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ்

கடந்த 20 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் 20 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டு விட்டது. மேலும் இந்த இலக்கை எட்டிய 22வது நாடு இந்தியா. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான்.

நோயாளிக்கு பரிசோதனை செய்யும் மருத்துவர்

ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கு அடிப்படையில் பார்த்தால் நமது மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உலகளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதேசமயம் நம் நாட்டில் பரிசோதனை 10 லட்சம் பேருக்கு 137 பேர் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.