கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு தெருவையும் அடைக்க வேண்டாம் : ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

 

கொரோனா  பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு தெருவையும் அடைக்க வேண்டாம் : ராதாகிருஷ்ணன்  அறிவுறுத்தல்!

கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

அதேபோல் சென்னையில் 4371 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

G

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா  வைரஸ்  தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

RR

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு தெருவை அடைப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடியிருப்பு அல்லது இரண்டு மூன்று வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களை கண்டறிந்து  அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கொரோனா பரிசோதனை மையத்திற்கு மாநகராட்சி  அலுவலர்கள் அழைத்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

TT

அதுமட்டுமின்றி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்றவை கிடைக்க மாநகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும்  துணியாலான முகக்கவசங்கள் இன்று  முதல் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.