கொரோனா பற்றி வதந்தி பரப்பிய நபர் கைது.. அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார்!

 

கொரோனா பற்றி வதந்தி பரப்பிய நபர் கைது.. அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார்!

சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது.

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் உலக அளவில் 14,30,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,01,130 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, அதிகமாக பகிரப்பட்டு வந்த செய்தியை, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்தது.

ttn

  இந்நிலையில் ராணிப்பேட்டை அருகே கொரோனா வைரஸ் குறித்து ஒருவர் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் உடனே அங்கு சென்ற போலீசார், நெடும்புலி கிராமத்தில் வசித்து வந்த குமரேசன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யபட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால், குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது  குறிப்பிடத்தக்கது.