கொரோனா பற்றி அவதூறு பரப்பியதாக வி.ஏ.ஓ மீது வழக்குப்பதிவு!

 

கொரோனா பற்றி அவதூறு பரப்பியதாக வி.ஏ.ஓ மீது வழக்குப்பதிவு!

சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது.

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் உலக அளவில் 14,84,811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,3,29,876 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு பரப்பும் நபர்களை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தும் வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். அதே போல, கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால், குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

ttn

இந்நிலையில் திருவண்ணாமலை செய்யாறு அருகே உள்ள ஆக்கூர் வி.ஏ.ஓ மாலிக் அலி கொரோனா பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில், போலீசார் மாலிக் அலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.