கொரோனா பரிசோதனை: கையில் அழியாத மை கொண்டு சீல் வைப்பு!

 

கொரோனா பரிசோதனை: கையில் அழியாத மை கொண்டு சீல் வைப்பு!

தமிழகத்தைப்  பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  236 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகா,டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.  

இதுவரை 209 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தைப்  பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார். 

tt

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக துபாயிலிருந்து விமானம் மூலமாக 250க்கும் மேற்பட்டவர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.  அவர்களுக்கு  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அனைவர்க்கும்  கைகளில் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து கூறியுள்ள அதிகாரிகள், சோதனைக்கு பின் ஏதாவது  பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அடையாளம் காண வசதியாக இருக்கும் என விளக்கம் அளித்துள்ளனர்.