கொரோனா பரிசோதனை கட்டணம் – தனியார் ஆய்வகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு

 

கொரோனா பரிசோதனை கட்டணம் – தனியார் ஆய்வகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு

தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

ttn

இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.