கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்… பிரியங்கா காந்தி எச்சரிக்கை

 

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்… பிரியங்கா காந்தி எச்சரிக்கை

கொரோனா பரிசோதனை இந்தியாவில் மிகக் குறைவாகவே நடத்தப்பட்டு வருகிறது. முதலில் வெளிநாட்டுக்கு சென்று வந்த பின்னணி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று அரசு கூறிவந்தது. வெளிநாட்டு பயணம் செய்யாத பலரும் மருத்துவமனைக்கு மிக ஆபத்தான நிலையில் வந்த பிறகே பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா நோய் கண்டறிதல் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். 
கொரோனா பரிசோதனை இந்தியாவில் மிகக் குறைவாகவே நடத்தப்பட்டு வருகிறது. முதலில் வெளிநாட்டுக்கு சென்று வந்த பின்னணி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று அரசு கூறிவந்தது. வெளிநாட்டு பயணம் செய்யாத பலரும் மருத்துவமனைக்கு மிக ஆபத்தான நிலையில் வந்த பிறகே பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்வது என்று அரசு உறுதியாக உள்ளது. இதனால், கொரோனா தொற்று நோயாளியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த, உடல் நலம் குறைந்தவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இதனால், கொரோனா சமூக தொற்று என்ற நிலையை அடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

corona-testing-89

இந்த நிலையில் கொரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா பரிசோதனையை இந்தியா அதிகரிப்பது மிகவும் கட்டாயமாகும். நோயின் தீவிரம், நோய் பரவுதல் மற்றும் அதன் மையப் புள்ளி எல்லாம் நோய்த் தொற்றை கண்டறிதல் மூலமே நமக்கு கிடைக்கும். ஊரடங்கின் பலனை அறுவடை செய்ய, அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்திய மருத்துவ உள் கட்டமைப்பை மேம்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும். அரசு அதிக பரிசோதனை செய்யவும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும். அரசு உடனடியாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

corona-doctors

கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும், எனவே கவனம் தேவை என்று ராகுல் காந்தி கூறியபோது பப்பு காந்தி, அவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஏளனமாகப் பேசினார்கள். தற்போது இந்தியா மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. எனவே, இனியாவது சிக்கலைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.