கொரோனா பரிசோதனையில் ஆப்ரிக்க நாடுகளுடன் போட்டிபோடும் இந்தியா! – ராகுல் காந்தி வேதனை

கொரோனா பரிசோதனையில் ஆப்ரிக்க நாடுகளுடன் போட்டிபோடும் இந்தியா! – ராகுல் காந்தி வேதனை

பரிசோதனை கிட் வாங்குவதில் ஏற்படுத்திய தாமதம் காரணமாக கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் இந்தியா பின் தங்கியுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

பரிசோதனை கிட் வாங்குவதில் ஏற்படுத்திய தாமதம் காரணமாக கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் இந்தியா பின் தங்கியுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா நோய்த் தொற்றும் அதிகம் உள்ள நாடுகள் எல்லாம் மிகப் பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையிலும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் இன்னும் இந்தியாவுக்கு வரவேயில்லை. இதனால், ஊரடங்கின் முழு பலனை இந்தியா அனுபவிக்க முடியாமல் போகலாம் என்று மருத்துவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

corona-test-kit

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய கவலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியா கொரோனா நோய் கண்டறியும் டெஸ்ட் கிட்டை வாங்க தாமதம் செய்தது, தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாம் தற்போது 10 லட்சம் பேருக்கு 149 பேர் என்ற கணக்கில்தான் கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். நமக்கு முன்பாக (ஆப்ரிக்க நாடுகளான) லாவோஸ் (10 லட்சம் பேருக்கு 157 பேர்), நைஜர் (182), ஹோண்ட்ராஸ் (162) பரிசோதனை செய்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா உள்ளது.

doctors

மிகப்பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்வதே கொரோனா ஒழிப்பு போரில் முக்கியம். தற்போதைய சூழலில் அந்த போரில் நாம் எந்த இடத்திலுமே இல்லை” என்று கூறியுள்ளார்.