கொரோனா பரவுவதை மது, புகைப் பழக்கம் அதிகரிக்கும்! – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

கொரோனா பரவுவதை மது, புகைப் பழக்கம் அதிகரிக்கும்! – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

கொரோனா பரவுவதை மது அருந்துதல், குளிர் பானங்கள் அருந்துதல், புகைபிடித்தல் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதை அந்த பழக்கத்தைக் கைவிடும்படி டாக்டர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

கொரோனா பரவுவதை மது அருந்துதல், குளிர் பானங்கள் அருந்துதல், புகைபிடித்தல் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதை அந்த பழக்கத்தைக் கைவிடும்படி டாக்டர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (21ம் தேதி) காலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவுவதை மது அருந்துதல், புகை பிடித்தல், சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்துதல் போன்றவை ஊக்குவிக்கும் என்பதால் அவற்றைக் கைவிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதை மதித்து மது, புகை, சர்க்கரை பானங்களை தவிர்க்கலாமே!

கேரளத்தில் ஆன்லைன் மது விற்பனையை செயல்படுத்தக்கோரி வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சரியான நடவடிக்கை. நாடே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது மதுவுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிப்பவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை கூட தரலாம்!” என்று கூறியுள்ளார்.