கொரோனா பரவாமலிருக்க புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்- ஹர்ஷ்வர்தன்

 

கொரோனா பரவாமலிருக்க புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்- ஹர்ஷ்வர்தன்

பான், குட்கா  போன்ற மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்பாட்டுக்கும் அவற்றை பொது இடங்களில் துப்பவும் தடை விதிக்க வேண்டுமென மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியுள்ளார். 

புகையிலைப் பொருட்களை மென்றுதின்று  பொது இடங்களில்  துப்புவதால் அது கொரோனா, காசநோய் போன்ற  தொற்றுநோய்கள் பரவலுக்கு வழி வகுக்கும் என்று  அக்கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவாமலிருக்க புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ள அவர், புகையிலை பொருட்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Gutka

மெல்லக் கூடிய புகையிலையை தவிர்ப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லமல் தூய்மைக்கும் உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குட்கா, பான் போன்ற மெல்லக் கூடிய புகையிலை பொருட்களுக்கு ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தடை விதித்துள்ளதை அமைச்சர் பாராட்டியுள்ளார்.