கொரோனா பரவல் விளைவு: கைவரிசையை காட்டும் ஹேக்கர்கள்…சைபர்க்ரைம் குற்றங்கள் இரட்டிப்பாக அதிகரிப்பு

 

கொரோனா பரவல் விளைவு: கைவரிசையை காட்டும் ஹேக்கர்கள்…சைபர்க்ரைம் குற்றங்கள் இரட்டிப்பாக அதிகரிப்பு

கொரோனா பரவல் சூழலை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டி சைபர்க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா பரவல் சூழலை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டி சைபர்க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு எதிரான ஹேக்கிங் குற்றங்கள் கடந்த மாதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏனெனில் கொரோனா தொற்றுநோய்களால் பல நிறுவனங்களின் பலவீனப்படுத்தப்பட்ட பாதுகாப்பை ஹேக்கர்கள் பயன்படுத்தி கொண்டனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் கார்ப்பரேட் நெட்வொர்க்குகள்  பலவீனமாகி ஹேக்கர்களின் வேலையை எளிதாக்குகிறது.

hackers

கார்ப்பரேட் பாதுகாப்பு குழுக்கள் தரவைப் பாதுகாப்பதில் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளன. பரவலாக மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட வீட்டு கணினிகளிலும், தொலைதூரத்தில் இணைக்கும் நிறுவன இயந்திரங்கள் காரணமாகவும் ஹேக்கிங் எளிதாக செய்யப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் போக்குவரத்திற்கு பாதுகாப்பான சுரங்கப்பாதைகளை அமைக்கும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளை (வி.பி.என்) பயன்படுத்தும் தொலைதூர ஊழியர்களாலும் ஹேக்கர்கள் பிரச்சினையை அதிகரிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மென்பொருள் மற்றும் பாதுகாப்பு நிறுவனமான வி.எம்.வேர் கார்பன் பிளாக் இந்த வாரத்தில் ரேன்சம்வேர் ஹேக்கிங்குகள் முந்தைய மாதத்தை காட்டிலும் மார்ச் மாதத்தில் 148 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியது. உலகளாவிய அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 22 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 5 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.