கொரோனா பரவல் அச்சம்: பேருந்து, ரயில் போக்குவரத்தை பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடு!

கொரோனா பரவல் அச்சம்: பேருந்து, ரயில் போக்குவரத்தை பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

Delhi secretariat building

இந்நிலையில்  பொது இடங்களில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் இடைவெளிவிட்டு நடமாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும், பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 வரை மூட மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் மார்ச் 31 வரை மூட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.