கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்!

 

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 22 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் சுமார் 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 14 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். 144 தடை உத்தரவால் தினக்கூலிகள், விவசாய கூலிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமான மற்றும் அமைப்புசார தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக எம் எல் ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கவுள்ளனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சமும் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளனர்.