கொரோனா நிவாரணம் கேட்ட ராமதாஸ்… விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொன்ன நிர்மலா சீதாராமன்! 

கொரோனா நிவாரணம் கேட்ட ராமதாஸ்… விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொன்ன நிர்மலா சீதாராமன்! 

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்கொள்ள வங்கிக் கடன் வசூலை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மக்களுக்கு உதவிகள் அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுவந்த நிலையில் விழிப்புணர்வு செய்யும்படி அவருக்கு மத்திய நிதி அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்கொள்ள வங்கிக் கடன் வசூலை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர்.

corona virus

இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், ஒரு மருத்துவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்!” என்று கூறியுள்ளார்.