கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வீட்டுக்கே வரும் – அமைச்சர் காமராஜ்

 

கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வீட்டுக்கே வரும் – அமைச்சர் காமராஜ்

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக,  அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அனைவரும் டோக்கன் வாங்குவதற்காக இன்று ரேஷன் கடை முன் குவிந்தனர்.

ttn

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  “கொரோனா நிவாரணத் தொகை ரூ.1000 டோக்கன் மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும். ஒவ்வொரு நாளும் ரேஷன் கடைகளில் 100 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரண தொகைக்கான டோக்கன் கிடைத்தவுடன் அடுத்த நாள் ரேஷன் கடைகளுக்கு வந்தால் போதும்” என தெரிவித்தார்.