கொரோனா நிதிக்கும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கும் ‘தல’அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி!

 

கொரோனா நிதிக்கும் ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கும் ‘தல’அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிதிக்கும் ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கும் ‘தல’அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித்  10 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் நிவாரணத்தொகைக்கு ரூ. 50லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ,50 லட்சமும் வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் சிவகுமார்  குடும்பம், நடிகர் சிவகார்திகேயன், பார்த்திபன்,  இயக்குநர் மனோ பாலா, இயக்குநர் கார்த்திசுப்புராஜ் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த உதவியை செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.