கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்? – பாஜகவின் பிதற்றலுக்கு பதிலடி கொடுத்த பல்கலைக்கழகம்

 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்? – பாஜகவின் பிதற்றலுக்கு பதிலடி கொடுத்த பல்கலைக்கழகம்

பாஜக வெளியிட்ட தகவலுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளேவட்னிக் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் பதிலடி கொடுத்துள்ளது.

லண்டன்: பாஜக வெளியிட்ட தகவலுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளேவட்னிக் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் பதிலடி கொடுத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிளேவட்னிக் ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் ஒரு விளக்கப்படம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ட்வீட் செய்யப்பட்டது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் இந்தியா அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பாஜக அந்த ட்வீட்டில் கூறியிருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மற்ற எந்தவொரு நாட்டு அரசாங்கத்தை காட்டிலும் மத்திய அரசு சிறப்பாக செய்து வருவதால், பிளேவட்னிக் ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் ஆய்வில் இந்தியா மிக உயர்ந்த மதிப்பெண்களை பெற்றிருப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. “பயனுள்ள ஊரடங்கை செயல்படுத்துவதில் மோடி அரசாங்கத்தின் செயல்திறன், தீவிரத்தன்மை மற்றும் விரைவான தன்மை” ஆகியவற்றை அந்த ட்வீட்டில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜகவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பிளேவட்னிக் ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் பதிலளித்துள்ளது. அதன்படி “எங்கள் டிராக்கரில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இது அரசாங்க கொள்கைகளின் எண்ணிக்கையையும் கண்டிப்பையும் பதிவு செய்கிறது. தொடர்புடைய ஸ்ட்ரென்சென்சி இன்டெக்ஸ் ஒரு நாட்டின் பதிலின் தகுதியை அல்லது செயல்திறனை அளவிடுவதாக விளக்கக்கூடாது – அதுபோன்ற மதிப்பெண்கள் இது இல்லை” என பிளேவட்னிக் ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் கூறியுள்ளது.