கொரோனா தொற்றை எளிதில் கண்டுபிடிக்க புதிய மென்பொருள் ! ராஜலட்சுமி கல்வி நிறுவனம் சாதனை !!

 

கொரோனா தொற்றை எளிதில் கண்டுபிடிக்க புதிய மென்பொருள் ! ராஜலட்சுமி கல்வி நிறுவனம் சாதனை !!

உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததுபோல் கொரோனா ஒரு தொற்று நோயாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததுபோல் கொரோனா ஒரு தொற்று நோயாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் கொரோனா மிக வேகமாக பரவுவதால் பலர் நாள்தோறும் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் புது புது நோயாளிகள் உருவாகி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவுதற்காக ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் மென்பொருள். இந்த மென்பொருளின் துல்லியத் தன்மை 95.4% கொரோனா தொற்றை கண்டறியும் முடியும் என கூறுகின்றனர். மேலும் இந்த மென்பொருளை அரசுக்கு இலவசமாக தர ராஜலட்சுமி கல்வி நிறுவனம் முன் வந்துள்ளது.

coronavirus-image

ஒருவருக்கு கொரோனா இருக்கிறது என கண்டறியும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த மென்பொருள் கோவிட்-19, சமூக தொற்று வாயிலான நிமோனியா, மார்பு எக்ஸ்ரேவை கொண்டு உடலின் நிலையை கண்டறிய முடியும். 
இந்த மென்பொருளை நாம் இன்ஸ்டலேஷன் செய்யவேண்டியதில்லை. எளிமையான, எங்கிருந்தும் இயக்க கூடிய நடைமுறை இது. சமூக வலை தளங்களில் பதிவேற்றுவதை போன்று இதை எளிதில் பதிவேற்ற முடியும். பதிவிட்ட மறு நொடியில் முடிவை அறியலாம்
டாக்டர் எஸ். ராஜ் குமார் (பேராசிரியர் மற்றும் தலைவர், உயிரி மருத்துவ பொறியியல் துறை), டாக்டர் வி.சப்தகிரிவாசன் (பேராசிரியர், உயிரி மருத்துவ பொறியியல் துறை), திரு.வி.ராஜாராமன் (உதவி பேராசிரியர் சிஎஸ்இ), அஷ்வின் ரமேஷ் (சிஎஸ்இ மூன்றாம் ஆண்டு மாணவர்) ஆகியோர் அடங்கிய குழு மென்பொருளை உருவாக்கி உள்ளனர். 

corona-testing-89

மேலும் இதுகுறித்து ராஜலட்சுமி கல்வி நிறுவன ரேடியாலஜிஸ்ட் டாக்டர் ஹரீ எஸ். மேகநாதன், குறுகிய காலத்தில் இரவு பகலாக வேலை செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக தர உள்ளதாக தெரிவித்தார்.

சமூகத்திற்கும்.நாட்டிற்கும் ஆற்றும் சேவையின் தொடர்ச்சியாக இந்த மென்பொருளை அரசுக்கு இலவசமாக வழங்க ராஜலட்சுமி கல்விக் குழுமம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.