கொரோனா தொற்று பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்

 

கொரோனா தொற்று பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்சத்து 47ஆயிரத்தை கடந்துள்ளது. 83ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்சத்து 47ஆயிரத்தை கடந்துள்ளது. 83ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் 5,480 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 690பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விவகாரத்தில்  அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே படைவீரர்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.