கொரோனா தொற்று சந்தையாக மாறிய கோயம்பேடு: ராமதாஸ் வேதனை!

 

கொரோனா தொற்று சந்தையாக மாறிய கோயம்பேடு: ராமதாஸ் வேதனை!

தொற்றுகளின் எண்ணிக்கை 119. சென்னையில் 52, அரியலூர் 22, விழுப்புரம் 20, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 என பட்டியல் நீள்கிறது!” என்று வேதனை தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் கோயம்பேடு சந்தை மட்டும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது டிவிட்டர் பக்கத்தில், “கோயம்பேடு காய்கறி மொத்த வணிக சந்தை மொத்த கொரோனா தொற்று சந்தையாக மாறியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119. சென்னையில் 52, அரியலூர் 22, விழுப்புரம் 20, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 என பட்டியல் நீள்கிறது!” என்று வேதனை தெரிவித்துள்ளார். 

மேலும் தனது மற்றொரு பதிவில், “சென்னையிலும், சென்னை புறநகர் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது முரண்பாடுதான். விதிகள் தளர்ந்தாலும் நாம் உறுதியாக இருந்தால் தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும். ஆகவே, ஊரடங்கை கடுமையாக கடைபிடிப்போம்!” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.