கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்து விட்டார்.

லண்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்து விட்டார்.

பிரிட்டனில் இதுவரை 22141 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 135 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அந்நாட்டில் 1408 பேர் பலியாகி உள்ளனர். பிரிட்டனில் 10 லட்சம் பேரில் 326 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 25-ஆம் தேதி இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது 71 வயது ஆகிறது.

ttn

அவர் உடல்நலத்தோடு இருப்பதாக அரச குடும்பம் தெரிவித்திருந்தது. அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் தென்படவில்லை. இளவரசர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்து விட்டார்.