கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3 கோடி! – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

 

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3 கோடி! – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

கொரோனா நோய்த் தடுப்பு பணிக்கு முதல் கட்டமாக எம்.பி தொகுதி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.15,000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை முதல் கட்டமாக வழங்குவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.