கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு!

 

கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2,570  செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் புதிதாக 2,570  செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

உலக நாடுகளை ஆட்டுவிக்கும் இந்த கொடிய வகை நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  நோய்த்தொற்று அதிவேகமாக பரவியதால்,  2,323 செவிலியர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டனர். ஆனால் தற்போது செவிலியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் புதிதாக 2,570  செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ttn

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னதாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது மேலும் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அதன் படி, செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும் ஆணை கொடுக்கப்பட்டர் 3 நாட்களில் செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 40 செவிலியர்கள், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.