கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிதியுதவி

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிதியுதவி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எந்தளவு உள்ளது என்பது தொடர்பான தகவல்களை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். சுமார் 3044வென்டிலேட்டர் சாதனங்களும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சுமார் 13 ஆயிரத்து 323 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Money

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிதியுதவி அளித்துள்ளனர். ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஜி.கே. வாசன், அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களும் நிதி கொடுத்துள்ள நிலையில் பொதுமக்களும் முதலமைச்சர் நிவாரண நிதி அளிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது