கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம்! – இந்திய கம்யூ. அறிவிப்பு

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம்! – இந்திய கம்யூ. அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க மிக விரைவாக பரிசோதனை செய்வதும், சிகிச்சை அளிப்பதும் அவசியம். ஆனால், இந்தியாவில் கொரோனா நோயைக் கண்டறியும் வசதி குறைவாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளின் தேவையும் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க மிக விரைவாக பரிசோதனை செய்வதும், சிகிச்சை அளிப்பதும் அவசியம். ஆனால், இந்தியாவில் கொரோனா நோயைக் கண்டறியும் வசதி குறைவாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வென்டிலேட்டர்கள் நிறையத் தேவைப்படுகின்றன.

corona-patient.jpg

இதற்காக தமிழக தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கருவிகள் உள்ளிட்டவை வாங்கி நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர். இதைப் பின்பற்றி அ.தி.மு.க-வும் நிதி உதவியை அறிவித்துள்ளது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் எம்.பி-க்களின் மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு பேர், கேரளாவில் ஒருவர் என்று மூன்று எம்.பி-க்கள் மட்டுமே உள்ளனர்.

d raja 98

தி.மு.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை அரசின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதேபோல், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்களும் தங்கள் சம்பளத்தை அரசுக்கு வழங்கினால் மிகப்பெரிய அளவில் நிதி உதவி அரசுக்குக் கிடைக்கும்.