கொரோனா தடுப்பு நடவடிக்கை.. பெரம்பலூரில் தற்காலிகமாக 10 வங்கிக் கிளைகளை மூட உத்தரவு!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை.. பெரம்பலூரில் தற்காலிகமாக 10 வங்கிக் கிளைகளை மூட உத்தரவு!

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 1724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும்  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

கோயம்பேட்டில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மூலமாக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பூர், குன்னம் பகுதிகளுக்கு சென்ற 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் நூற்றுக் கணக்கான நபர்களின் முடிவுகள் வரவிருக்கிறது. அதனால் அப்பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளை தற்காலிகமாக மூட அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதே போல, துங்கபுரம்,குன்னம்,பரவாய், மேலமாத்தூர்,கொளக்காநத்தம்,அகரம் சீகூர்,வயலப்பாடி,வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள 10 வங்கிகளின கிளைகளை  இன்று முதல் தற்காலிகமாக மூடுமாறும், கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.