கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

 

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.  குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் என்றும் இல்லாத படி   நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் இதுவரை சென்னையில் மட்டுமே  906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என்றும் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு  இருக்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

ff

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனொரு பகுதியாக சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏடிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆபாஸ்குமார், அமரேஷ் புஜாரி உள்ளிட்டோரும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மண்டல வாரியாக 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.