கொரோனா டெஸ்ட் கிட் ஏற்றுமதி செய்த மோடி அரசு! – காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

கொரோனா டெஸ்ட் கிட் ஏற்றுமதி செய்த மோடி அரசு! – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏப்ரல் 4ம் தேதி வரை கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு அனுமதித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபடி இந்தியாவில் பரிசோதனைகள் செய்யப்படுவது இல்லை. மிகக் குறைந்த அளவிலேயே இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டு வந்துள்ளது. இது போதுமானது இல்லை. ஊரடங்கின் பலனை அனுபவிக்க அதிக பரிசோதனை செய்து கொரோனா நோயாளிகளைக் கண்டறிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 4) வரை கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு அனுமதித்தததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் டெஸ்ட் செய்வது போதுமான அளவில் இல்லை என்ற நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்வீட் பதிவில், ஏப்ரல் நான்காம் தேதி வரை வெளிநாடுகளுக்கு கொரோனா பரிசோதனை கிட்டை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது இந்தியாவில் மிகத் துணிவுடன் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ பணியாளர்களை மறுதளித்த செயல். அரசின் இந்த செயலாளர் ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளது.