கொரோனா சோதனை – தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

 

கொரோனா சோதனை – தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

coronavirus

தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள்: 

  • ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டும் சோதனை செய்யப்படும்
  • பரிசோதனை எதுவாக இருந்தாலும் 14 நாள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • வெளி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் 
  • அவர்களில் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும் 
  • டெல்லி, குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற ஹாட்ஸ்பாட்களில் இருந்து வருவோரில் தொற்று இல்லை என்றாலும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமையில் வைத்திருக்கப்பட வேண்டும்
  • வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் சோதனை செய்து தொற்று இருந்தால் மருத்துவமனைக்கும்,தொற்றில்லாவிட்டால், 7 நாள் தனிமையிலும் வைக்கப்பட வேண்டும் 
  • மிகவும் உடல்நிலை சரியில்லாத, மருத்துவமனையில் சேர வேண்டிய நிலையில் உள்ளவர்கள், நெருங்கிய உறவினர் இறப்புக்கு செல்ல வேண்டியவர்கள், கர்ப்பிணிகள், 75 வயது முதியவர்கள் ஆகியோர் பயணப்பட நேர்ந்தால் இந்த நான்கு பிரிவினருக்கு மட்டும் தளர்வு அளிக்கப்படும் 
  • மற்ற எந்த பிரிவினருக்கும் தளர்வு கிடையாது.