கொரோனா சோதனை கருவிகளை பறித்துக் கொண்ட மத்திய அரசின் செயல் தமிழர் விரோதப்போக்கின் உச்சம் – சீமான் கண்டனம்

 

கொரோனா சோதனை கருவிகளை பறித்துக் கொண்ட மத்திய அரசின் செயல் தமிழர் விரோதப்போக்கின் உச்சம் – சீமான் கண்டனம்

தமிழகம் சார்பாக கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா சோதனை கருவிகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகம் சார்பாக கொள்முதல் செய்யப்பட்ட கொரோனா சோதனை கருவிகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து 30 நிமிடங்களில் முடிவை வழங்கக் கூடிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனும் கருவியை சீனாவிடம் இருந்து வாங்க 4 லட்சம் சாதனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த கருவியை மாநிலங்கள் நேரடியாக பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது தமிழகம் சார்பாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

seeman

இந்நிலையில், தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக் கொண்டு அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க மத்திய அரசு முனைவது தமிழர் விரோதப் போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு தொடர்ச்சியாக தமிழின விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். துயர் சூழ்ந்த இந்த பேரிடர் காலத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கி தமிழின விரோத போக்கினை மத்திய அரசு தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருவதாக சீமான் கூறியுள்ளார்.