கொரோனா சாம்பிளுடன் நடுநோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! – மக்கள் பீதி

 

கொரோனா சாம்பிளுடன் நடுநோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! – மக்கள் பீதி

கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிகக் குறைவான அளவிலேயே பரிசோதனை செய்துவிட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று அரசுகள் கூறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

டெல்லியில் கொரோனா மாதிரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் வானிலை காரணமாக நடுரோட்டில் தரையிரங்கிய சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிகக் குறைவான அளவிலேயே பரிசோதனை செய்துவிட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று அரசுகள் கூறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சந்தேகத்துக்கு உரியவர்களிடமிருந்து ஆய்வுக்காக பெறப்பட்ட மாதிரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென்று நடுரோட்டில் தரையிறங்கியது.

cheetah-chopper

டெல்லியில் இருந்து சண்டிகருக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென்று வீசிய சூறைக்காற்றால் தடுமாறியது. இதனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே விமானி அந்த ஹெலிகாப்டரை டெல்லி அவுட்டர் ரிங் ரோட்டில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை தொழில்நுட்ப குழுவினர் வேகமாக அங்கு விரைந்தனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மாதிரிகள் சிதறியிருந்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.