கொரோனா சமூக தொற்று நிலையை அடையவில்லை – மத்திய அரசு வெளியிட்ட ஆறுதல்

 

கொரோனா சமூக தொற்று நிலையை அடையவில்லை – மத்திய அரசு வெளியிட்ட ஆறுதல்

மத்திய அரசின் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின்படி கொரோனா சமூக தொற்று என்ற நிலையை அடையவில்லை. இதுபோன்று மிகப்பெரிய தொற்று ஏற்படும் போது தினசரி அது பரவும் விதம் பற்றி ஆய்வுகள் நடத்தப்படும். அப்படி கொரோனாவுக்கும் நாட்டின் பல பகுதிகளில் தினமும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் சமூக தொற்று என்ற நிலையை அது அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது” என்றார்.

கொரோனா சமூக தொற்று என்ற நிலையை அடையவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசின் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின்படி கொரோனா சமூக தொற்று என்ற நிலையை அடையவில்லை. இதுபோன்று மிகப்பெரிய தொற்று ஏற்படும் போது தினசரி அது பரவும் விதம் பற்றி ஆய்வுகள் நடத்தப்படும். அப்படி கொரோனாவுக்கும் நாட்டின் பல பகுதிகளில் தினமும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் சமூக தொற்று என்ற நிலையை அது அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது” என்றார்.

isolation-wards

மதுரையில், நொய்டாவில் வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதில், மதுரையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. சமூக தொற்று என்ற நிலையை அடைந்ததால்தான் வெளிநாட்டுக்கே செல்லாத அந்த நபருக்கு தொற்று ஏற்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், சமூக பரவல் நிலையை அடையவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருப்பது நிம்மதியும் சற்று பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.