கொரோனா கூட கமல் நாத் அரசை காப்பாற்றாது…. சிவ்ராஜ் சிங் ஆவேசம்….. உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற பா.ஜ.க….

 

கொரோனா கூட கமல் நாத் அரசை காப்பாற்றாது…. சிவ்ராஜ் சிங் ஆவேசம்….. உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற பா.ஜ.க….

கொரோனா வைரஸ் கூட கமல் நாத் அரசை காப்பாற்றாது என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மேலும் 12 மணி நேரத்துக்குள் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. மனு தாக்கல் செய்துள்ளது.

[17:27, 3/16/2020] Gps: மத்திய பிரதேச அரசியலில் கடந்த சில  நாட்களாக குறிப்பாக, ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது முதல் பரபரப்பான நிகழ்வுகள் நிகழந்து கொண்டு இருக்கிறது. சிந்தியாவுக்கு விசுவாசமான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். இதனையடுத்து முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டான்டன் மார்ச் 16ம் தேதி (நேற்று) சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல் நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சபாநாயகர்தான் முடிவு எடுப்பார் என கமல் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமா என்ற சந்தேகம் எழுந்தது. நேற்று மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்றி சென்ற பிறகு, கொரோனா வைரஸை காரணம் காட்டி அம்மாநில சட்டப்பேரவை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றம்

இது பா.ஜ.க.வினருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதனையடுத்து, மத்திய பிரதேச சட்டப்பேரவையில் அடுத்த 12 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், கொரோனா வைரஸ் கூட கமல் நாத் அரசை காப்பாற்றாது என தெரிவித்தார்.