கொரோனா கூடாரமாகும் கோயம்பேடு: கடலூர் திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கொரோனா கூடாரமாகும் கோயம்பேடு: கடலூர் திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் கோயம்பேடு சந்தை மட்டும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாக, பழ வியாபாரி ஒருவர், மலர் வியாபாரிகளான தந்தை – மகன், சந்தையில் கூலி வேலை செய்யும்  கணவன்-மனைவி, அரியலூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மற்றும் காய்கறி வாங்கி சென்ற நபர் என தொடர்ந்து கொரோனா தொற்று உறுதியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ttt

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை  45 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மூலம் சென்னை 50, அரியலூர் 19, கடலூர் 17, விழுப்புரம் 2, கடலூர் 17, பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.