கொரோனா காலத்திலும் மூடியிருக்கும் ஐ.சி.எம்.ஆர் மதுரை ஆய்வகம்! – சு.வெங்கடேசன் கண்டனம்

 

கொரோனா காலத்திலும் மூடியிருக்கும் ஐ.சி.எம்.ஆர் மதுரை ஆய்வகம்! – சு.வெங்கடேசன் கண்டனம்

கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் மதுரையில் உள்ள நோய் கண்டறிதல் ஆய்வுக் கூடத்தை மத்திய மருத்துவ ஆய்வுக் கழகம் மூடியிருப்பது கண்டனத்துக்குரியது, அதை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் மதுரையில் உள்ள நோய் கண்டறிதல் ஆய்வுக் கூடத்தை மத்திய மருத்துவ ஆய்வுக் கழகம் மூடியிருப்பது கண்டனத்துக்குரியது, அதை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

icmr-09

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இந்தியா முழுமைக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய வேளையில், இந்தியா போதிய அளவிற்கு சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து பல முறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு , “எந்த அளவிற்கு சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்கள் உள்ளனவோ அவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று பதில் சொல்லப்பட்டது. சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்களை அதிகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கை தினம் தினம் அரசிடம் வைக்கப்படுகிறது.

corona-patient

ஆனால், மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி உள்ளது, அந்த கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர், ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன. இதை விட ஐசிஎம்ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா? இந்த ஆய்வகம் தமிழகத்தில் யானைக்கால் நோய் தொற்றுக்கு எதிராக நிறைய ஆய்வுகளையும் சோதனைகளையும் செய்த முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வகம். அதில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் கொரோனா குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளது ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் .

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினம் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக சோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலமே நோய் தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து நோய் பரவாமல் தடுக்க முடியும். எனவே உடனடியாக மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனாவை கண்டறிவதற்கான சோதனைகளை துவக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
PCR கருவியில் பயன்படுத்த தேவைப்படும் வேதியல் மூலக்கூறுகள் அல்லது ரசாயனப் பொருட்களை தருவித்து ஆய்வகத்தை செயல்படவைக்கவேண்டும். மேலும் புதிய கருவியை வாங்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஆய்வகம், மக்களுக்கு அதிகம் தேவைப்படும் காலத்தில் செயல்படாமல் போனால் அந்த ஆய்வகத்தின் பயன் என்ன?” என்று கூறியுள்ளார்.