கொரோனா காரணமாக போராட்டத்தைக் கைவிடுங்கள்… வண்ணாரப்பேட்டை குழுவினருக்கு கமல் கடிதம்

 

கொரோனா காரணமாக போராட்டத்தைக் கைவிடுங்கள்… வண்ணாரப்பேட்டை குழுவினருக்கு கமல் கடிதம்

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து நடிகர் கமல் அளித்த கடிதம் என்று கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், “இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி ஒரு நாள் தேசம் இரண்டுபடும்போது, இதுதான் என் தேசம், இங்குதான் என் வாழ்க்கை என்று தங்கிவிட்ட பெருமக்களின் மனதில் அச்சத்தையும் அவர்கள் இருப்புக்கு ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய முறையற்ற குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்தியில் ஆளும் அரசு கடந்த டிசம்பர் 11ம் தேதி கொண்டுவந்தது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் தொடர் போராட்டத்தை கொரோனா பாதிப்பு காரணமாக கைவிடும்படி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.

kamalhasaan-98

இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து நடிகர் கமல் அளித்த கடிதம் என்று கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், “இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி ஒரு நாள் தேசம் இரண்டுபடும்போது, இதுதான் என் தேசம், இங்குதான் என் வாழ்க்கை என்று தங்கிவிட்ட பெருமக்களின் மனதில் அச்சத்தையும் அவர்கள் இருப்புக்கு ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய முறையற்ற குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்தியில் ஆளும் அரசு கடந்த டிசம்பர் 11ம் தேதி கொண்டுவந்தது. மக்களின் கருத்துக்கும், அவர்களின் விருப்பத்திற்கும் செவி சாய்க்கும் வழக்கம் இந்த அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. நான் நீதிமன்றத்தில் தான் இதற்கு தீர்வு பெற முடியும் என்ற நம்பிக்கையில் எனது மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச் செயலாளர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.

mnm letter

அதே நேரம் அச்சத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மக்கள் களம் இறங்கி போராடுவதற்கு என் ஆதரவையும் என்னை வந்து சந்தித்த இஸ்லாமிய பெருமக்களிடம் நியாயமான உங்கள் போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள், வன்முறையற்ற போராட்டமாக அது தொடர வேண்டும் என்று கூறியிருந்தேன்.
ஆனால், கடந்த 8 வாரங்களாக பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலில் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், நமது தேசத்திலும் இப்போது அது பரவ ஆரம்பித்துள்ளது. பாதிப்படைந்த எல்லா நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காவது மற்றும் ஐந்தாவது வாரத்தில் பன்மடங்காக அதிகரித்துள்ளது. மக்கள் திரளும் அனைத்து வாய்ப்புக்களையும் தவிர்ப்பது தான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

mnam-party

நீங்கள் எனது குடும்பம், உரிமைக்கான இந்த போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதை விட உங்கள் அனைவரின் பாதுகாப்பும், நலனும் எனக்கு முக்கியம். உடல் நலமுடன் நீங்கள் இருந்தால்தான் உரிமைக்காக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும். எனவே, இப்போது உங்கள் நலனில் அக்கறை செலுத்தி இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் நம்முடனிருப்பவர்களையும் காப்பாற்றிக் கொள்வோம். மீண்டும் நிலைமை சீரானதும் எதிர்ப்பை முன்பைவிட தீவிரமாக காட்டுவோம். உங்களுடன் அப்போதும் நான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.