கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சட்னியுடன் சுடசுட சமோசா கேட்ட வாலிபர்!

 

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சட்னியுடன் சுடசுட சமோசா கேட்ட வாலிபர்!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோரோனா வைரஸ் மற்றும் முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் கைகளில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில ராம்பூரில், மாவட்ட நீதிபதி ஆஜநேய குமார் தலைமையில், கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு, சட்னியுடன் சமோசா வேண்டும் என்று கேட்டுள்ளார். போனை எடுத்த அதிகாரிகள் இது கொரோனா கட்டுப்பட்டு அறை என்று ஓரிரு முறை தெரிவித்தும், எச்சரித்தும் அந்த வாலிபர் மீண்டும் மீண்டும் போன் செய்து, சமோசா கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். 

சாக்கடை சுத்தம் செய்த வாலிபர்

இதையடுத்து, அந்த இளைஞருக்கு அவர் விரும்பியவாறே நான்கு சமோசாக்களை சட்னியுடன் அனுப்புமாறு, நீதிபதி ஆஜநேய குமார் உத்தரவு பிறப்பித்தார். அதேநேரம், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக, சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனையும், நீதிபதி வழங்கி உத்தரவிட்டார். கிடைத்த சமோசாவை கூட நிம்மதியாக சாப்பிடவில்லை என்ற சோகத்தில் அந்த இளைஞர் சாக்கடையை சுத்தம் செய்தார்.