கொரோனா எதிரொலி: பிரசித்திப்பெற்ற வீரபாண்டி கோவில் திருவிழா ரத்து

கொரோனா எதிரொலி: பிரசித்திப்பெற்ற வீரபாண்டி கோவில் திருவிழா ரத்து

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீரபாண்டி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீரபாண்டி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ளது ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில். முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைமாதத்தில் 7நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தீச்சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தல், சேற்றாண்டி வேஷம் போன்ற நேர்த்தி கடன் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மேலும் இரவு, பகலாக நடைபெறும் ராட்டினம், சர்க்கஸ், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களை கண்டு ரசிப்பதற்கு தென் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமனோர் வந்து செல்வர்.

temple festival

இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கி ஏப்ரல் 22ஆம் தேதி திருக்கம்பம் நடப்பட்டு திருவிழா மே 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக மே  3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் பக்தாகள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த சித்திரைத் திருவிழா நிகழ்வுகள்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் கோவில்  செயல் அலுவலர் சுரேஷ் அறிவித்தார்.