கொரோனா இல்லாத மாநிலமாக மாற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா இல்லாத மாநிலமாக மாற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறிவது முற்றிலுமாக நின்றுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் தமிழகம் புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்படாத மாநிலமாக மாறும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறிவது முற்றிலுமாக நின்றுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் தமிழகம் புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்படாத மாநிலமாக மாறும் என்று கூறப்படுகிறது.

corona-in-madhya-pradesh

இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக புதிய நோய்த்தொற்றுகள் இல்லை. 6 மாவட்டங்களில் 10 நாட்களாக நோய்த்தொற்றுகள் இல்லை. இது கொரோனா இல்லாத தமிழகத்தை நோக்கிய முன்னேற்றம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள்!

புதிய கொரோனா தொற்றுகள் இல்லை என்ற செய்திகள் பிற மாவட்டங்களிலிருந்தும் வரவேண்டும். நிறைவில் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கையும், சமூக இடைவெளியையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்!”