கொரோனா இருந்தால் உடனடி அலெர்ட்.. புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு!

 

கொரோனா இருந்தால் உடனடி அலெர்ட்.. புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு!

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொரோனா விழிப்புணர்வு செயலிகளை உருவாக்கின.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனைப்பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொரோனா விழிப்புணர்வு செயலிகளை உருவாக்கின. அந்த வகையில்,  மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, சுகாதாரத் துறை இணைந்து ஆரோக்கிய சேது என்ற செயலியை உருவாக்கியுள்ளன. 

ttn

தொடக்கத்தில் இதனை சோதனை செய்வதற்காக கவச் என்ற பேரில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த செயலியின் பெயரை ஆரோக்கிய சேது என்று மாற்றம் செய்து வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், நம் உடல்நிலை குறித்து அதில் அனைத்து தகவல்களையும் கொடுக்கும் பட்சத்தில், கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள மேற்கோள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த செயலி தெரிய படுத்துமாம. 

ttn

அதுமட்டுமில்லாமல், கொரோனவால் பாதிக்கப்பட்ட நபர், தனிமைபடுத்தப்பட்ட நபர் நம் அருகே இருந்தால் உடனடியாக இந்த செயலி நமக்கு எச்சரிக்கை செய்யுமாம். 11 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஜி.பி.எஸ் மூலம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் நாம் அளிக்கும் விவரங்கள் மத்திய அரசை தவிர வேறு யாருக்கும் கிடைக்கப்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.