கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! – செங்கோட்டையன் திட்டவட்டம்

 

கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! – செங்கோட்டையன் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்னும் நடத்த முடியாத நிலை உள்ளது.

கொரோனா பாதிப்பு இருக்கும் வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்னும் நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் எப்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும், பிளஸ் 2 ரிசல்ட் எப்போது வெளியாகும், புதிய கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று ஏராளமான கேள்விகள் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

school-students

இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு பள்ளி திறப்பது பற்றி முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

EDAPPADI-PALANISAMY-89

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நிச்சயம் நடக்கும். கொரோனாவுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும். பள்ளியில் கொரோனா வைரஸ் பற்றியும் சமூக இடைவெளி பற்றியும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்” என்றார்.