கொரோனா ஆய்வு – இந்தியாவில் 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

 

கொரோனா ஆய்வு – இந்தியாவில் 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை நான்காக இருந்தது. தற்போது இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

ttn

இந்த நிலையில், கொரோனா ஆய்வு தொடர்பாக 18 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதிக்க ஆய்வகம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மருந்து கட்டுப்பாட்டாளர் டி.சி.ஜி.ஐ யின் ஒப்புதலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான உரிமத்தை சுவிஸ் நிறுவனமான ரோச் டையக்னாஸ்டிக்ஸ் இந்தியா பெற்றுள்ளது.