கொரோனா அபாயம்: டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!

 

கொரோனா அபாயம்: டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!

கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்திற்கு பிறகு சொந்த நாடுகளுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று கண்டறியப்பட்டது. அதில் மொத்தமாக 1,131 பேர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிய வந்த நிலையில், அவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

ttn

இதனிடையே அதில் 515 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள நபர்களை கண்டுபிடிப்பது சிரமம் என்பதால், அவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் வேறொருவருக்கு பரவுவதற்கு முன்னர்   7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், அவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.