கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

 

கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மேலும் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதன் மூலம் சென்னை மட்டுமின்றி பல மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியிலும், 20 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதுவரை சிவகங்கை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்கள் பச்சை மண்டலமாக இருந்து வந்த நிலையில், கோவை மற்றும் நாமக்கல் மாவட்டமும் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

ttn

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து மேலூருக்கு வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மேலும் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் மேலூரின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் மகாராஷ்டிராவில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலூரில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 25,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பரவலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.