‘கொரோனா அச்சுறுத்தல்’ பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்!

 

‘கொரோனா அச்சுறுத்தல்’ பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்!

பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்னும் நடக்காத நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தப்படவில்லை.  இதனால் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. 

ttn

வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஜூன் மாத இறுதியில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பள்ளிகளை திறக்குமாறு வலியுறுத்தினால் தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா என கேள்வி எழுவதால், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.