கொரோனா அச்சறுத்தல்: 3 வயது குழந்தை கொடுத்த அட்வைஸ்!

 

கொரோனா அச்சறுத்தல்:  3 வயது குழந்தை கொடுத்த அட்வைஸ்!

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,119 ஆக உள்ளது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் பயணிகள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

 

கொரோனாவை தடுக்க அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கைகள் வழியாகத்தான் நோய்த்தொற்றுகள் அதிகம் உண்டாகின்றன. எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.  இருமல் மற்றும் தும்மல் வரும் போது  கைக்குட்டை அல்லது டிஷ்ஷு போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

ttn

 
இந்நிலையில் 3 வயது பெண் குழந்தை கை கழுவுதல் குறித்து செயல்  முறை விளக்கம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.