கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

 

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 வயது மூதாட்டி நோயை வென்று நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். 

அமெரிக்காவில் பிறந்தவரான மரியா பிரான்யஸ் (Maria Branyas) கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ஓலாட்(  olot) நகரில் வசித்துவருகிறார். ஸ்பெயின் நாட்டிலேயே மிகவும் வயதானவராக கருதப்படும் மரியா, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மரியா

 தனிமைப்படுத்துதலில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவந்த மரியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படும் முதியவர்கள் இறக்கும் விகிதம் அதிகம் உள்ள சூழலில், ஸ்பெயினின் முதிய பெண்மணி உயிர்பிழைத்து கொரோனாவை வென்று காட்டியுள்ளார்