கொரோனாவை முதன்முதலில் கண்டு பிடித்த டாக்டருக்கும் வைரஸ் தாக்குதல்.. அதிர்ச்சி தகவல்!

 

கொரோனாவை முதன்முதலில் கண்டு பிடித்த டாக்டருக்கும் வைரஸ் தாக்குதல்.. அதிர்ச்சி தகவல்!

கடல் உணவுகள் விற்பனை செய்து வரும் 7 பேருக்கு புதிய வகை வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும், அதன் பெயர் கொரோனா வைரஸ் என்றும்  வீ சாட் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் அதி வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இது வரை 300க்கும் மேற்பட்ட நபர்களை மரணமடையச் செய்துள்ளது. இது மனிதனுக்கு மனிதன் எளிதில் பரவுவதால், மக்களை இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியவில்லை. இந்த நோய் பாதிப்பால் கிட்டத்தட்ட 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முறையான மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலைக் கண்டு பிடித்த மருத்துவருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 

ttn

சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் லி வென்லியாங்(34). இவர் கடந்த ஆண்டு 30 ஆம் தேதி கடல் உணவுகள் விற்பனை செய்து வரும் 7 பேருக்கு புதிய வகை வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும், அதன் பெயர் கொரோனா வைரஸ் என்றும்  வீ சாட் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அந்த செய்தி இணைய தளத்தில் வேகமாகப் பரவி சீனா அரசின் கவனத்தை எட்டியுள்ளது. ஆனால், அதனை நிராகரித்த அதிகாரிகள் அவர் வதந்தியைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

ttn

அதன் பிறகு சில நாட்களிலேயே  லி வென்லியாங் கூறியதை போல கொரோனா வைரஸ் சீனாவை உலுக்கியது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பு இருக்கும் ஒரு நபரைச் சோதித்ததால் லி வென்லியாங்கும் இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறிய உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வைரஸ் தாக்குதலிலிருந்து பல மக்கள் காப்பற்றப் பட்டிருக்கலாம் என்று சீன மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.