கொரோனாவை கண்டறிய போதிய வசதி இல்லை… பின்னடைவை சந்திக்கும் மத்தியப் பிரதேசம்

கொரோனாவை கண்டறிய போதிய வசதி இல்லை… பின்னடைவை சந்திக்கும் மத்தியப் பிரதேசம்

கொரோனா பாதிப்பு மத்தியப் பிரதேசத்தில் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய போதிய வசதி இல்லாமல் மத்தியப் பிரதேசம் திண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா பாதிப்பு மத்தியப் பிரதேசத்தில் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய போதிய வசதி இல்லாமல் மத்தியப் பிரதேசம் திண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் ஆறு நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். ஒரு வாரம் ஆகும் நிலையில் இப்போது வரை அங்கு ஒரு நாளைக்கு 36 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யும் வசதி உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

corona-patients-mp

இது குறித்து போபால் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சர்மான் சிங் கூறுகையில், “மாதிரிகள் வந்து குவிகின்றன. ஆனால், எங்களால் ஒரு நாளைக்கு 36 சாம்பிள்கள் மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது” என்றார்.
அதேபோல் எய்ம்ஸ் மண்டல வைரலாஜி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறிதல் ஆய்வுக் கூடத்தில் அதிகபட்சமாக 63 சாம்பிள்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறதாம்.
மத்திப் பிரதேசத்தில் தற்போது 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மாநிலம் திணறி வருவது, மேலும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.